Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (12:48 IST)
ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில், ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்த படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்தப் படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது.

அதையடுத்து ஆதி நடித்த வீரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் நீண்டகாலமாக மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இயக்குனர் ஏ ஆர் கே சரவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் இரும்பொறை என்ற மன்னன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் இரும்பொறை மன்னனின் ஆவி பற்றி குறிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அந்த கதாபாத்திரம் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொத்த அழகையும் கட்டவிழ்த்த எஸ்தர் அணில்! மொத்தமா காட்டிட்டீங்களே! - சொக்கிப் போன ரசிகர்கள்!

கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு திடீர் திருமணமா? வைரலாகும் புகைப்படம்! - இதுதான் விஷயமா?

விருதுகள் இன்று குடிசைத் தொழில் போல் ஆகி விட்டன- கவிஞர் சேரன் பேச்சு!

நடிகர் ரியாஸ் கான் மூத்த மகனான ஷாரிக் ஹாசன் பேட்டி.....

‘தீபாவளி போனஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments