Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்திக்கு சார்பட்டா பரம்பரை… கம்பேக் கொடுக்கும் கலைஞர் தொலைக்காட்சி!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
ஆர்யா மற்றும் பலர் நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தைக் கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. சில ஆண்டுகாலமாக படங்கள் எதுவும் வாங்காமல் இருந்த கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம், இப்போது ஆட்சியை திமுக கைப்பற்றியதை அடுத்து புத்துணர்ச்சி பெற்று படங்களை வாங்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் கலைஞர் மற்றும் திமுக அருமை பெருமைகளை பேசிய படமான சார்பட்டா பரம்பரை படத்தை முதலில் வாங்கி விநாயகர் சதுர்த்திக்கே களமிறக்க உள்ளதாம். சமீபத்தில் இது சம்மந்தமாக கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகிகளை தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்யா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

கமல், ரஜினிக்குப் படம் பண்ணமாட்டேன்… சிவகுமாரின் கேள்விக்கு இயக்குனர் பாலா சொன்ன பதில்!

மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி: ரஜினிகாந்த்

விஜய் ஆண்டனி இசைக்கச்சேரிக்கு வருபவர்களுக்கு இலவச பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

விடாமுயற்சி ‘சாவடிக்கா’ பாடல் வெளியானது.. லிரிக் வீடியோவுக்கு வெயிட் பண்ணுங்க! - அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments