Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்து புருஷன் எவ்வாறு தோன்றினான் என்பது பற்றி தெரியுமா...?

வாஸ்து புருஷன் எவ்வாறு தோன்றினான் என்பது பற்றி தெரியுமா...?
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (00:06 IST)
சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார் .அப்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது.
 
அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால், அந்த பூதம் சிவனை நோக்கி தபஸ் செய்ய ஆரம்பித்தது.
 
தபஸ்ஸை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார் வழக்கம்போல். அதற்க்கு இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும் என்று கேட்டது. அழிக்கும் சக்தியும் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது.
 
இதை கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே  உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தனர்.
 
அந்த பூதம் எனக்கு பசிக்கிறது என்றது. அதற்க்கு பிரும்மா சொன்னார். பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்டகளை நீ 
 
உண்டுகொள். மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள், உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாபிட்டுக்கொள் என்றனர்.
 
பிரும்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர். இவ்வாறு வாஸ்து புருஷன் தோன்றினான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்திரை பௌர்ணமி நாளில்... சித்ரகுப்தர் வழிபாடு !!