Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்கிலோனா தியேட்டர் ரிலீஸ்… தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:28 IST)
டிக்கிலோனா திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலிஸ் செய்யலாம் என்ற தயாரிப்பாளரின் முடிவால் அவருக்கு சில கோடிகள் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சந்தானம் நடித்து வந்த ’டிக்கிலோனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகக் காத்திருந்தது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றிருந்ததால் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

ஆனால்  தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதனால் சில மாதங்கள் கழித்து இப்போது ரிலீஸுக்கு திட்டமிட்டு பிஸ்னஸ் விஷயங்களை ஆரம்பித்துள்ளார். ஆனால் இடையில் வெளியான சந்தானத்தின் படங்கள் சரியாக ஓடாததால் இப்போது திரையரங்க உரிமையைக் கம்மியான தொகைக்கு விநியோகஸ்தர்கள் கேட்கிறார்களாம். அதனால் தயாரிப்பாளருக்கு சில கோடிகள் நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments