Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’டிக்கிலோனா’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?

’டிக்கிலோனா’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?
, வியாழன், 25 மார்ச் 2021 (20:19 IST)
சந்தானம் நடித்து வந்த ’டிக்கிலோனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்தன. சந்தானம் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முழுமையாக சமீபத்தில் முடித்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தயாரித்த நிறுவனம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’டிக்கிலோனா’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ் என்ற திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆனது என்பதால் இந்த படமும் திரையரங்கில் தான் ரிலீஸாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. தேர்தல் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அனேகமாக இந்த படம் மே மாதம் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
webdunia

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2019 ஆம் ஆண்டில் அதிகம்பேர் விரும்பிய பாடல் இதுதான்!