Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப்ஸி தயாரிக்கும் இந்தி படத்தில் கதாநாயகியாக சமந்தா!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (10:43 IST)
நடிகை சமந்தா டாப்ஸி தயாரிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து விவாகரத்துக்கு சமந்தாதான் காரணம் என்றும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மேல் அவதூறுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் எதிர்மறையான சூழலில் இருந்து விலகும் விதமாக சமந்தா படங்களில் மறுபடியும் அதிகளவில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிலும் பாலிவுட் படங்களுக்கான வாய்ப்புகள் வருவதால் மும்பையில் புதிதாக ப்ளாட் ஒன்றில் அவர் குடியேற உள்ளதாக சொல்லப்படுகிறது. பேமிலி மேன் 2 வெப் தொடர் அவருக்கு உலகம் முழுவதும் கவனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கும் டாப்ஸி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதைப் போலவே ஷாருக் கான் படத்தில் இருந்து நயன்தாரா விலகும் முடிவில் உள்ளதாகவும் அந்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments