Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எங்க தெரியுமா?

Advertiesment
சமந்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எங்க தெரியுமா?
, வெள்ளி, 3 நவம்பர் 2017 (10:31 IST)
சமந்தா-நாக சைதன்யாவின் திருமணம், கடந்த மாதம் கோலாகலமாக கோவாவில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் 100  பேர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நடக்க உள்ளது. 

 
 
சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஒரு பிசியாகிவிட்டார். திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே மகாநதி படத்தில்  இணைந்தார். சமீபத்தில் லண்டன், இங்கிலாந்து என வெளிநாட்டில் தான் இருப்பதை தன் ஸ்டேட்டஸ் மூலம் பதிவிட்டிருந்தார்.  அதோடு அவர் தன் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு நடனம் ஆடிய புகைப்படங்கள் வெளியானது.
 
இந்நிலையில் வரும் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ரசிகர்கள் மற்றும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாத்துறை உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார் பதிவு மோசடி - தவறான செய்தி; அமலாபால் அறிக்கை