Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

ஜக்கி வாசுதேவுடன் சமந்தா… இணையத்தில் கவனம் பெற்ற புகைப்படம்!

Advertiesment
சமந்தா
, திங்கள், 11 ஜனவரி 2021 (17:01 IST)
நடிகை சமந்தா ஆன்மிகவாதியான ஜக்கி வாசுதேவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நித்யானந்தாவுக்கு பிறகு அதிக அளவில் பிரபலமான சாமியாராக இருப்பவர் ஜக்கி வாசுதேவ். இவரின் ஈஷா மையமும் ஆதியோகி சிலையும் சர்ச்சைகள் பலவற்றை உண்டுபண்ணியுள்ளன. ஆனாலும் அவரின் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல லட்சக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.

அவ்வப்போது இவரை சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்கள் வந்து சந்தித்து செல்கின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா இப்போது ஜக்கி வாசுதேவ் உடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ‘சீடன் தயாராக இருக்கும் போது குரு தானாக தோன்றுவார்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படத்துக்காக சம்பளத்தை விட்டுக் கொடுத்தாரா விஜய்?