தமிழகத்தில் உள்ள கோயில்கள் எல்லாம் அரசியல்வாதிகளாலும் அரசின் பிடியிலும் உள்ளது என்று சாமியார் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நித்யானந்தாவுக்கு பிறகு அதிக அளவில் பிரபலமான சாமியாராக இருப்பவர் ஜக்கி வாசுதேவ். இவரின் ஈஷா மையமும் ஆதியோகி சிலையும் சர்ச்சைகள் பலவற்றை உண்டுபண்ணியுள்ளன. ஆனாலும் அவரின் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளுக்கு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல லட்சக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஜக்கி வாசுதேவ் இப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. எனக் கூறியுள்ளார்.