Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய், அஜித்தோடு நடிக்க மறுத்தேனா?... சாய் பல்லவி அளித்த பதில்!

விஜய், அஜித்தோடு நடிக்க மறுத்தேனா?... சாய் பல்லவி அளித்த பதில்!

vinoth

, ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:47 IST)
நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து சாய்பல்லவி இப்போது விளக்கமளித்துள்ளார். அதில் “ விஜய் மற்றும் அஜித் ஆகியோரோடு இணைந்து நடிக்க எனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களோடு இணைந்து நடிக்க மறுத்திருக்க முடியும். இப்படி நடக்காத ஒரு விஷயத்தை திரித்து பேசுவது ரொம்பவே தவறானது” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்டையன் படம் பார்த்த விஜய் என்ன சொன்னார்?.. வெங்கட்பிரபு சொன்ன தகவல்!