Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரண்பீர் கபூர் & சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்துக்காக 11 செட்கள் உருவாகிறது…!

Advertiesment
ரண்பீர் கபூர் & சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்துக்காக 11 செட்கள் உருவாகிறது…!

vinoth

, புதன், 31 ஜூலை 2024 (17:27 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

முதலில் இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவோடு இணைந்து அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி மற்றும் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர்கள் அவர்கள் பிரிய நமீத் மல்ஹோத்ரா யாஷொடு இணைந்து தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்காக 11 செட்கள் பிரம்மாண்டமாக மும்பை ஸ்டுடியோக்களில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த செட்கள் அனைத்தும் 3 டி வடிவமைப்புக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு பின்னர் அங்கு ஷூட்டிங் நடத்தப்படவுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் ஷூட்டிங் மொத்தமும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது..' கீர்த்தி சுரேஷின் ’ரகு தாத்தா’ டிரைலர்..!