Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இயக்குனர் ஜனநாதன் உடல்நிலை

Advertiesment
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இயக்குனர் ஜனநாதன் உடல்நிலை
, வெள்ளி, 12 மார்ச் 2021 (08:36 IST)
இயக்குனர் ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயற்கை, ஈ,  பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன். இடதுசாரி சிந்தனைக் கொண்டவராக அறியப்படும் இவருக்கு சினிமா உலகில் மிகப்பெரிய மரியாதை உண்டு. தற்போது அவர் இயக்கிவரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உதவி இயக்குனர்கள் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால் இன்னமும் அவர் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளதாம். அவருக்கு மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆதரவு… கார்த்திக் கட்சிக்குள் பிளவு!