Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் பிக்சர்ஸோடு சிவகார்த்திகேயன் 5 படங்களுக்கு கூட்டணி… வதந்திக்கு முற்றுப்புள்ளி!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:53 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக மொத்தம் 5 படங்களில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி வெளியானது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசாத்தியமான வளர்ச்சிக் கண்டவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அவர்தான் என்ற அளவுக்கு அவரின் மார்க்கெட் சென்றது. ஆனால் சமீபகாலமாக அவர் தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடையவே அவரின் மார்க்கெட் இப்போது 30 சதவீதம் வரை சுருங்கியுள்ளதாம்.

இந்நிலையில் மறுபடியும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அவரை மொத்தமாக 75 கோடு சம்பளம் பேசி சன் பிக்சர்ஸ் நிறுவனம் 5 படங்களுக்கான தேதிகளை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சுமார் ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் மட்டுமே சிவகார்த்திகேயன் பெறுகிறார். ஆனாலும் சன் பிக்சர்ஸ் எப்படியும் படத்தை பிரம்மாண்டமாக ப்ரமோட் செய்யும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதை சிவகார்த்திகேயன் தரப்பு மறுத்துள்ளது. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் கடன் சுமையை ஏற்றுக்கொண்ட கே ஜே ஆர் நிறுவனத்துக்காக இன்னும் அவர் சில படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாம், அதை முடிக்காமல் மற்ற படங்களில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments