நடிகர் சந்தானம் அடுத்ததாக மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம். சமீபகாலமாக அவர் நடிப்பில் ஏ 1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவு கவனம் பெற்றன.
இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ரத்னவேல் தனது நண்பர் லோகேஷ் கனகராஜுக்காக மாஸ்டர் படத்தின் கதையில் பங்களிப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.