Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RRR ரிலீஸ் தேதியை திடீர்னு மாற்றிய நெட்பிளிக்ஸ்… குஷியான ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:32 IST)
RRR படத்தின் இந்தி வெர்ஷன் நெட்பிளிக்ஸில் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பாகுபலிக்குப் பின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மார்ச் 25 ஆம் தேதி  வெளியானது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி திரையரங்குகள் மூலமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி 5 ஓடிடியில் வரும் மே 20 ஆம் தேதி முதல் தென்னிந்திய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது RRR படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் நெட்பிளிக்ஸில் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென ரிலீஸ் தேதியை முன்னர் தள்ளி தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் மே 20 ஆம் தேதியே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments