Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நேரத்தில் 3000 புகைப்படங்கள்: ரோஜாவின் கின்னஸ் சாதனை!

roja guinness
, ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:18 IST)
நடிகையும் ஆந்திர மாநிலம் அமைச்சருமான ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்தது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. 
 
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் கின்னஸ் சாதனை செய்வதற்காக ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 
 
நேற்று 3000 போட்டோகிராபர்கள் திருமண மண்டபத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தயாராக இருந்தபோது மேடை ஏறிய ரோஜாவை ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்தனர்.
 
ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் ஒரு அமைச்சரை போட்டோ எடுத்தது உலகிலேயே இது தான் முதல் முறை என்பதால் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை அடுத்து ரோஜாவுக்கு அதற்கான சான்றிதழும் கின்னஸ் நிர்வாகத்திலிருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் First Single ரிலீஸ்! எல்லாரும் வாங்க..! – இடத்தை சொன்ன கார்த்தி!