Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீச்சல் உடை புகைப்படம் கேட்ட நபர்…. மாளவிகா மோகனனின் ‘செம்ம’ பதில்

நீச்சல் உடை புகைப்படம் கேட்ட நபர்…. மாளவிகா மோகனனின் ‘செம்ம’ பதில்
, சனி, 25 ஜூன் 2022 (08:51 IST)
நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இதையடுத்து அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லை. இப்போது மாளவிகா மோகனன் பிரபல ராப் இசைக்கலைஞரான பாட்ஷாவோடு இணைந்து ‘TAUBA’ என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். இது மாளவிகா நடிக்கும் முதல் இசை ஆல்பம் ஆகும்.

சோஷியல் மீடியா மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இசை ஆல்பம் வெளியீட்டு ப்ரமோஷனாக அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்தார். அப்போது மாளவிகாவிடம் ஒரு ரசிகர் “உங்கள் நீச்சலுடை புகைப்படங்களை பகிருங்கள்” என்று ஆபாசமான கேள்வியை கேட்டிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக மாளவிகா “பிகினி உடைகளின் புகைப்படங்களை” பகிர்ந்திருந்தார். அவரின் இந்த பதில் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’… சேட்டிலைட் & டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!