Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்கள் அந்த இடத்தில் கைவைத்தால் அனுபவிக்கனும் - ரேகா நாயரின் சர்ச்சை பேச்சு!

Advertiesment
ஆண்கள் அந்த இடத்தில் கைவைத்தால் அனுபவிக்கனும் - ரேகா நாயரின் சர்ச்சை பேச்சு!
, திங்கள், 3 ஜூலை 2023 (15:24 IST)
சீரியல் நடிகையான ரேகா நாயர் அவரது தோழியான சித்ரா தற்கொலை செய்துக்கொண்டு இறந்தபோது அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசி பிரபலம் ஆனார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
 
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் சர்ச்சையான ரோலில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் தனுஷின் தீவிர ரசிகை, ஒருவேளை எனக்கு திருமணம் ஆகவில்லை என்றால் நான் தனுஷை திருமணம் செய்திருப்பேன். இதை அவரிடம் நேரில் ஒரு முறை கூறினேன். ஆனால் அவர் அதை சாதாரணமாக தான் எடுத்திருப்பார். ஏனென்றால் இதுபோல் அவரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் என கூறினார்.
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள ரேகா நாயர், தற்போதுள்ள சில பெண்கள் நான் இது போன்று தான் ட்ரஸ் போடுவேன்..உங்களுக்கு என்ன? என்று சொல்கிறார்கள். அப்போ எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கவேண்டும். உதாரணமாக, அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ அதைவிட்டுவிட்டு ஆராயாக்கூடாது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 
 
மேலும் பேசிய அவர், " நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். எனவே ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் சாதிய பாகுபாடு..? பா.ரஞ்சித் கருத்துக்கு உதயநிதி பதில்