Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரே நபர்... இனி இவர் மட்டும் போதும் - ரக்ஷிதா எடுத்த அதிரடி முடிவு!

என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரே நபர்...  இனி இவர் மட்டும் போதும் - ரக்ஷிதா எடுத்த அதிரடி முடிவு!
, சனி, 1 ஜூலை 2023 (18:13 IST)
தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மீனாட்சி கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை ரக்ஷிதா.  மேலும் இவர் ‘உப்புகருவாடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். 
 
சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களும் பரீட்சயமானவர் நடிகை ரக்ஷிதாவுக்கு சினிமாவில் இந்த நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பாரை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரிந்துவிட்டனர். 
 
ரக்ஷிதா பிரிந்த கணவர் எனக்கு தினமும் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்கிறார் என்றும், போனில் தொடர்பு கொண்டு கொலைமிரட்டல் விடுகிறார் என போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாங்காடு மகளிர் நிலைய காவல்நிலையத்தில் ஆஜரான தினேஷ் ரக்ஷிதா விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி செல்லலாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 
 
இதையடுத்து ரக்ஷிதாவிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அப்படி எதுவும் ஆபாச மெசேஜ் அனுப்பவே இல்லை என போலீஸ் ரக்ஷித்தவை விசாரித்து திட்டியதாக தகவல் வெளியானது. தினேஷும் இவ்வளவு ஆன பிறகு விவாகரத்து செய்விடுகிறேன் என கூறினார். இந்நிலையில் தினேஷ் தனது இன்ஸ்டாக்ராமில் "எனது அன்பான நண்பர்களே மற்றும் நலம் விரும்பிகளே. நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். என் நன்மையைத் தவிர வேறு எதுவும் என்னைக் காயப்படுத்தவில்லை"என பதிவிட்டிருந்தார். 
 
ரசிகர்கள் எல்லோரும் இவர்கள் சேர வேண்டும். தினேஷும் ரொம்ப நல்லவர் தான் என தங்களது  அபிப்ராயத்தை கூறி வரும் நிலையில் தற்ப்போது ரக்ஷிதா " My one nd only therapist... My baby" என கேப்ஷன் கொடுத்து பூனை மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கும் அவரது ரசிகர்கள் இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள் என கூறி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சகட்ட படுக்கை காட்சியில் நடித்துவிட்டு சின்ன பசங்களுக்கு அட்வைஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!