Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ராயன்’ படத்தின் 3வது நாயகி.. போஸ்டரை வெளியிட்ட தனுஷ்..!

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (18:34 IST)
தனுஷ் நடித்த 50வது படமான ’ராயன்’ திரைப்படத்தில் ஏற்கனவே இரண்டு நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் மூன்றாவது நாயகியை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 
 
தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் போஸ்டர்களை தனுஷ் தினமும் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
ஏற்கனவே பிரகாஷ்ராஜ், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, ஆகியோர்களின் போஸ்டர்களையும், அதனை அடுத்து துஷாரா விஜயன், அபர்னா பாலமுரளி ஆகியோர்களின் போஸ்டர்களை வெளியிட்ட தனுஷ் தற்போது இந்த படத்தின் மூன்றாவது நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்த போஸ்டரையும் அவர் வெளியிட்ட நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

விடாமுயற்சி முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?... வெளியான தகவல்!

நான் விஜய் சேதுபதியை வைத்துப் படம் இயக்குகிறேனா?... மணிகண்டன் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments