கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதையடுத்து லாரன்ஸ் அடுத்து அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் மனிஷ் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸோடு பயணிக்கும் கதாபாத்திரமாக வனவிலங்கு ஒன்று நடிக்க உள்ளதாம். அதனால் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தாய்லாந்தில் நடக்க உள்ளதாம்.