நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா கில்லர் என்ற படத்தை தயாரித்து, நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில்  நண்பன், மெர்ஷல், மாநாடு, மார்க் ஆண்டனி , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக நடித்து அசத்தினார்.
 
									
										
			        							
								
																	
	 
	தற்போது தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும்  நிலையில், அவர் புதிய படத்தை இயக்கி,  நடித்து, தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
	 
 
									
											
									
			        							
								
																	
	இதற்காக வெளிநாட்டில் இருந்து கார் வாங்கி அதை பராமரித்து வருவதாகவும், இப்படத்தின் பெயர் கில்லர் எனவும், இப்படத்திற்கான கதையை 6 ஆண்டுகளாக பட்டை தீட்டியதாகவும் இப்படத்தைத் தொடங்க அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
	 
 
									
			                     
							
							
			        							
								
																	
	இப்போது அவர் நடிக்கும் படங்களுக்கு பிசினஸ் உள்ளதால் இவர் இயக்கி நடிக்கும் படமும் நல்ல வரவேற்பை பெறும் என எஸ்.ஜே.சூர்யா யோசித்து வருகிறார் என தகவல் வெளியாகிறது.