Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

vinoth

, ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (07:28 IST)
பாலிவுட்டில் தூம் வரிசை படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக உள்ளன. இதன் முதல் பாகத்தில் ஜான் ஆப்ரஹாமும், இரண்டாம் பாகத்தில் ஹ்ருத்திக் ரோஷனும் மூன்றாம் பாகத்தில் அமீர் கானும் கதாநாயகனாக(திருடர்களாக) நடித்தனர். மூன்று பாகங்களிலும் காவல்துறை அதிகாரி வேடத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார்.

இதையடுத்து தூம் 3 வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து நான்காம் பாகம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நான்காம் பாகத்தில் ஷாருக் கானை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ரன்பீர் கபூர் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தூம் 4 படத்தை தன்னுடைய 25 ஆவது படமாக நடிக்க ரன்பீர் கபூர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான கதையை தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா எழுத, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!