Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2025 ஆம் ஆண்டிலும் ஷாருக் கான் படம் ரிலிஸாகாதா?... கிங் படத்தின் ரிலீஸ் எப்போது?

2025 ஆம் ஆண்டிலும் ஷாருக் கான் படம் ரிலிஸாகாதா?... கிங் படத்தின் ரிலீஸ் எப்போது?

vinoth

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (09:16 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அதனால் 2024 ஆம் ஆண்டு அவரின் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார். 

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்கி இறுதிவரை நடக்க உள்ளதாம். அதனால் இந்த படம் 2026 ஆம் ஆண்டுதான் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதனால் 2025 ஆம் ஆண்டும் ஷாருக் கானின் எந்த படமும் ரிலீஸாகாது என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி ரூபாய் வசூல் க்ளப்பில் இணைந்த நானியின் ‘சரிபோதா சனிவாரம்’!