Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதை பொருள் வழக்கு… ரகுல் ப்ரீத் சிங்குக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!

Advertiesment
போதை பொருள் வழக்கு… ரகுல் ப்ரீத் சிங்குக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:50 IST)
நடிகை ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்ட சில நடிகர் நடிகைகள் மீது போதை பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

சமீபத்தில் போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் அவர் சிக்கியதாக எழுந்த செய்திகள் சலசலப்பை உருவாக்கின. இந்நிலையில் இப்போது ரகுல் ப்ரீத் சிங்கை நீதிமன்றத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரகுலுக்கு மட்டும் இல்லாமல் மேலும் பல நடிகர்களுக்கும் இதுபோல சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு முடிந்தது: விரைவில் ரிலீஸ் தேதி!