Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு முடிந்தது: விரைவில் ரிலீஸ் தேதி!

’ஆர்.ஆர்.ஆர்’ படப்பிடிப்பு முடிந்தது: விரைவில் ரிலீஸ் தேதி!
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (16:06 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவந்த ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது. ஒரு சில பிக்கப் ஷாட்ஸ் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
வரலாற்று கதையம்சம் கொண்ட ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் பாலையா, ஆலியா பட், அஜய்தேவ்கான் உள்பட பலர் நடித்து உள்ளனர் என்பதும் மரகதமணி இசை அமைப்பில் உருவாகிய இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்!