Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் இபாஸ் விவகாரம்: சென்னை மாநகராட்சி ஆணையரின் பதில்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (18:18 IST)
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கேளம்பாக்கத்திற்கு தனது காரில் குடும்பத்துடன் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி டுவிட்டரில் ’லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது.
 
இந்த ட்ரெண்டை பிடிக்காத ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்கள், ரஜினிகாந்த் இபாஸ் வாங்காமல் கேளம்பாக்கம் சென்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்தார்கள்
 
இதனை அடுத்து இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ’ரஜினிகாந்த் இபாஸ் வாங்கினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டியில் ’ரஜினிகாந்த் இபாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்று உள்ளார் என்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ரஜினிகாந்த் இபாஸ் வாங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து ரஜினி இபாஸ் வாங்காமல் சென்றதாக கூறியவர்களுக்கு பதிலடியாக இந்த பேட்டி அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments