Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி மகளுக்கு எப்போது திருமணம்?

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (11:26 IST)
ரஜினி மகள் சவுந்தர்யாவின் 2-வது திருமணம் சென்னையில் வரும் 10-ந்தேதி நடக்கிறது. தொழில் அதிபரின் மகனான நடிகர் விசாகனை மணக்கிறார்


 
நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா,  சவுந்தர்யா என்று 2 மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சவுந்தர்யா  தொழில் அதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
 
இந்த நிலையில் சவுந்தர்யா-அஸ்வின் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு மகனுடன் தனியாக வசித்து வந்தார். 
 
இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் வணங்காமுடியின் மகனான விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர்.  ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 
 
சவுந்தர்யா-விசாகன் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையாக நடக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்