Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜபக்‌ஷேக்களுக்கு நல்லா வேணும்..! – மகிழ்ச்சி பதிவிட்ட நட்டி நட்ராஜ்!

Advertiesment
Nataraj
, வியாழன், 12 மே 2022 (11:54 IST)
இலங்கையில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் நடிகர் நடராஜன் அதுகுறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். மேலும் பல அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்த சம்பவங்களை ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழ்நாட்டு மக்கள் பலர் ஈழ போரில் ராஜபக்சே குடும்பம் இழைத்த அநியாயத்திற்கு கிடைத்த கூலி இது என்ற வகையில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல தமிழ் ஒளிப்பதிவாளரும், சதுரங்க வேட்டை நடிகருமான நடராஜ், இது ராஜபக்சே குடும்பத்திற்கு அவசியமானதுதான் என்ற வகையில் பதிவிட்டுள்ளார். மேலும் பல திரையுலகினரும் ராஜபக்சே ஆட்சியின் வீழ்ச்சி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி அதிகாரங்களில் தமிழனை அமர வைப்போம்: பாரதிராஜா