Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்தில் இணைந்த பிரபல இந்தி நடிகர்!

vinoth
வெள்ளி, 28 ஜூன் 2024 (07:10 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.  இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் 15 நாட்களுக்கு மேல் நடந்தது. அங்கு சிம்பு மற்றும் கமல் பங்கேற்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்போது இந்தியன் 2 பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கமல் ஈடுபட்டு வருவதால் படத்துக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தக் லைஃப் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில் இப்போது இந்தி நடிகரான ராகுல் சாராஃப் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments