Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

vinoth

, வியாழன், 27 ஜூன் 2024 (11:18 IST)
பாகுபலி 2 க்குப் பின் பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வரிசையாக ப்ளாப் ஆகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீஸாகிறது. படத்தின் டிரைலர்கள் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளன.

இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள் கோமியோ ரோலில் நடித்துள்ளனர். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, நானி, ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருனாள் தாக்கூர் ஆகியோரின் கேமியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!