Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

J.Durai

, புதன், 26 ஜூன் 2024 (16:14 IST)
இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”.  பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
 
கல்கி 2898 கிபி இல், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பார்வையாளர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே ஃபிரேமில் காண வெகு ஆவலோடு உள்ளனர். 
 
ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் திரையில் மீண்டும் இணைவதைக் காணும் வாய்ப்பிற்காகவும், படத்தின் புதுமையான கதைக்களம் மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாக தரிசிக்கவும் ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கல்கி 2898 கிபி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமென எதிரப்பார்க்கப்படுகிறது.  இப்படம் இந்திய புராணக்கதையில் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் கதையை, இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், அட்டகாசமான  உருவாக்கத்தில் வழங்குகிறது.
 
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில்,  அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்