Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்! – சந்திரமுகி 2 படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (10:47 IST)
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்.

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சந்திரமுகி. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்க பி.வாசு முயன்று வரும் நிலையில் அதில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. ரஜினிக்கு பதிலாக இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மைசூரில் தொடங்குகின்றன. படப்பிடிப்புக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் “நண்பர்களே.. ரசிகர்களே.. என் குருநாதர் ரஜினிகாந்த் ஆசியுடன் இன்று சந்திரமுகி 2 படப்பிடிப்பு மைசூரில் தொடங்குகிறது. உங்கள் அனைவருடைய ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments