பிரபல நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்! – அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (09:54 IST)
தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகராக இருந்த பிரதாப் போத்தன் உடல்நல குறைவால் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் பிரதாப் போத்தன். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல ஹிட் படங்களை அளித்தவர் பிரதாப்.

இவர் இயக்கத்தில் வெளியான சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், வெற்றி விழா உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ட்ரெண்ட் செட்டிங் படங்களாக அமைந்தவை. பிரபல நடிகை ராதிகாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்ட நிலையில் அமலா சத்யநாத் என்ற பெண்ணை மணந்து கொண்டார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவாக இருந்து வந்த பிரதாப் போத்தன் தற்போது  உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு தற்போது வயது 69 என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments