உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த இரு எபிசோட்களும் இந்தியாவில் பெரிய அளவில் கவனம் பெற்றன.
இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் கலந்துகொள்கிறார். இதன் டிரைலர் நாளை வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.