Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை என்னை உலுக்கிவிட்டது… இதிலிருந்து வெளியில்வர சில நாட்கள் ஆகலாம் - பாராட்டிய ஆர் ஜே பாலாஜி!

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:50 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம்  கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். படம் பார்த்த ரசிகர்கள் பகிரும் கருத்துகளும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்துக்கு முதல் மூன்று நாட்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமைந்தது.

இரண்டாவது வாரத்தில் இந்த படம் நன்றாக ஓடிவரும் நிலையில் படத்தை இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி பாராட்டியுள்ளார். அதில் “வாழை படம் என்னை உலுக்கிவிட்டது. அதிர்ச்சியூட்டும் ஒரு வாழ்க்கையப் படமாக எடுத்துள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியேற எனக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

கேம்சேஞ்சர் ப்ரமோஷன்… ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments