Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவாக முதல் படம்… வெளிநாட்டில் ஷூட்டிங்… கலக்கும் CWC புகழ்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (16:12 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன புகழ் இப்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் இன்னும் சில காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் படமாக்க உள்ளனராம். இதற்காக இப்போது படத்தின் இயக்குனர் ஜே சுரேஷ் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுவிட்டார். விரைவில் புகழ் சென்று அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments