Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தி மகன்? ராகுல் காந்தியுடன் பிரச்சாரம்?

Mahendran
சனி, 2 நவம்பர் 2024 (11:26 IST)
சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, வயநாடு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலில் அறிமுகமாகும் நிலையில், அவரது மகன் காந்தி, வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ராகுல் காந்தி, தனது சமூக வலைதள பக்கத்தில் ரைஹான் காந்தியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய வீடியோவை ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.
 
தீபாவளியின் மகத்துவம் மற்றும் மக்கள் எப்படி தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்பதைக் குறித்து ராகுல் காந்தி தனது மருமகனிடம் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவையும், வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பவர்களுடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கும் வீடியோவையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 24 வயதான ரைஹான் காந்தி, புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவரது படங்கள் டெல்லி மற்றும் மும்பை கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், ராகுல் காந்தி தனது மருமகனான ரைஹான் காந்தியுடன் பெயிண்ட் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளதை அடுத்து, ரைஹான் காந்தியும் தனது மாமாவின் ஆலோசனைப்படி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments