Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யிடம் கற்றதை இப்போதும் நான் கடைபிடிக்கிறேன்… பிரியங்கா சோப்ரா!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:32 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்த அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் இவரின் முதல் படம் ஒரு தமிழ் படம்தான். விஜய்யுடன் தமிழன் படத்தில்  2002 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாகி பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். குவாண்டிகோ உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை மணம் முடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கற்ற பாடங்கள் பற்றி பேசியுள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ எனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நான் நடித்தது தமிழன் திரைப்படமும் இரு இந்தி படங்களும். அப்போது நான் நிறைய கற்றுக்கொண்டேன். நடிப்பு என்பது மேக்கப் மற்றும் ஆடைகள்தான் என்று நினைத்து சென்றேன். என்னுடைய திரைவாழ்க்கையின் ஆரம்பத்தில் தாக்கம் செலுத்திய நபர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் அவர் வெளியே செல்லவே மாட்டார். அதை நான் இன்றுவரை பின்பற்றுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments