Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் மகள் தினமும் கேட்பது இது தான்... போட்டோ பதிவிட்டு மனம் உருகும் பிரித்விராஜ் மனைவி!

Advertiesment
என் மகள் தினமும் கேட்பது இது தான்... போட்டோ பதிவிட்டு மனம் உருகும் பிரித்விராஜ் மனைவி!
, வெள்ளி, 8 மே 2020 (15:53 IST)
கொரோனா வைரஸ் தாக்குதலால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த திரைத்துறையினரும் வீட்டில் இருந்து வருகின்றனர். . ஆனால், மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக     58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் இருக்கின்றனர்.

ஊரடங்கு காரணத்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவரகள் தாய் நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வருகிறன்றனர். இது பற்றி நடிகர் பிரித்விராஜ் சமீபத்தில் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாக கூறி ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். இந்த தகவல் அனைவரையும் உருக்குலைத்தது. இதையடுத்து அவரது மனைவி கணவரின் வருகையை எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவரது மனைவி சுப்ரியா மேனன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டிருள்ளார். அதில் , தினமும் என் மகள் என்னிடம் லாக்டவுன் முடிந்ததா? அப்பா இன்றைக்கு வந்திடுவாரா...? என கேட்கிறாள் இப்பொழுது நானும் எனது மகளும் அவரை காண காத்திருக்கிறோம்'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதை படிக்கும் அனைவரது மனமும் வேதனை அடைகிறது. விரைவில் அவர் பத்திரமாக வீடு திருப்புவார் கவலைப்படவேண்டாம் என மனைவி சுப்ரியா மேனனுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர் இணையவாசிகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் திரையரங்குகளை திறபக்கலாம்- சினிமா பிரபலம் அதிரடி!