பிரேம்குமாரின் அடுத்த படம் ‘ஆவேஷம்’ போல இருக்கும்… தயாரிப்பாளர் நம்பிக்கை!

vinoth
சனி, 4 அக்டோபர் 2025 (12:49 IST)
96  என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.

இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டு, அதே நிறுவனத்துக்காக விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அந்த படமும் தள்ளிவைக்கப்பட்டு தற்போது அவர் ஃபஹத் பாசில் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் பற்றி பேசியுள்ள ஐசரி கணேஷ் “பிரேம்குமாரின் முதல் இரண்டு படங்களுமே எனக்குப் பிடிக்கும். அடுத்து ஃபஹத் பாசிலை வைத்து அவர் இயக்கும் படம் இன்னொரு ‘ஆவேஷம்’ படம் போல இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments