ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

Siva
திங்கள், 6 அக்டோபர் 2025 (18:35 IST)
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'எல்ஐகே' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் மற்றும் க்ருத்தி ஷெட்டி நடித்துள்ள 'எல்ஐகே' திரைப்படம் முதலில் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
அதே தேதியில் மற்றொரு திரைப்படமான 'டூட்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், தீபாவளி வெளியீட்டில் எந்த படம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இரண்டு படங்களும் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்தவை என்பதால் போட்டி நிலவியது.
 
தற்போது, 'டூட்' திரைப்படம் அக்டோபர் 17 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டதால், 'எல்ஐகே' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, 'எல்ஐகே' திரைப்படம் இனி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments