Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன்?

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (07:36 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து ப்ரதீப் அடுத்து ஹீரோவாக தொடர்ந்து நடிப்பாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என யூகங்கள் எழுந்துள்ளன. அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது ஒரு ஆச்சர்யத் தகவல் பரவி வருகிறது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் பிரதீப்பும் இருந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் ஆசை காரணமாக பிரதீப் அந்த வாய்ப்பை மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகுதான் அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது.. 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்..!

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments