Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெறி படத்தின் இந்தி ரீமேக்… இயக்குனர் அட்லி ஏற்கும் பொறுப்பு!

தெறி படத்தின் இந்தி ரீமேக்… இயக்குனர் அட்லி ஏற்கும் பொறுப்பு!
, புதன், 17 மே 2023 (07:57 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை முடித்த பின்னர் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் பங்காற்ற உள்ளார் அட்லி; ஆனால் இயக்குனராக இல்லையாம். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கிய தெறி படத்தை இந்தியில் வருண் தவானை வைத்து ரீமேக் செய்ய உள்ளார்களாம். அந்த படத்தில் இயக்குனர் மேற்பார்வையாளர் என்ற பொறுப்பை அட்லி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா விக்ரம்?... த செ ஞானவேல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!