நடிகை பூஜா ஹெக்டே இப்போது தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாகியுள்ளார்.
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.
இந்நிலையில் விஜய் படத்தில் ஒப்பந்தமான ராசியோ என்னமோ வரிசையாக பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேதான் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.