Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தளபதி 65’ படத்தின் முதல் ஸ்டில்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம் வைரல்

’தளபதி 65’ படத்தின் முதல் ஸ்டில்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம் வைரல்
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:19 IST)
’தளபதி 65’ படத்தின் முதல் ஸ்டில்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம் வைரல்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று படக்குழுவினர் ஜார்ஜியா சென்றடைந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டு அசத்தி உள்ளது 
 
விஜய் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியும் பின்னணியில் படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தேவையான பணிகளை செய்து கொண்டு இருக்கும் காட்சியும் இந்த புகைப்படத்தில் உள்ளது. இதனை அடுத்து இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்
 
தளபதி 65 படத்தின் முதல் புகைப்படம் என்பதால் இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அகில இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரென்ட் கொண்டு வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…