Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் வருகிறதா?... பார்த்திபன் கொடுத்த அப்டேட்!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (14:17 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் மேடையில் பேசும் போது “நான் இன்னும் முதல் பாகமே பார்க்கவில்லை. முதல் பாகத்தைப் பார்க்க தஞ்சாவூருக்கு சென்ற போது ரசிகர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டேன். அதனால் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்று நான் சொல்ல முடியாது. முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் பார்த்திபனிடம் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் எடுக்கப்படுகிறதா எனக் கேட்ட போது “இருந்தால் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments