Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மணி நேரம் ஓடுமா பொன்னியின் செல்வன் 2?... இணையத்தில் பரவும் தகவல்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:08 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம், 3.30 மணிநேரம் அளவுக்கு பைனல் மிக்ஸுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், திரையரங்குகளில் ரன்னிங் டைம் 3 மணிநேரம் அளவுக்கு இருக்கும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் 2.30 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அபிப்ராயப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments