Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் என் வேலையைதான் செய்தேன்… ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்த்திய நிறுத்திய போலீஸ் விளக்கம்!

Advertiesment
நான் என் வேலையைதான் செய்தேன்… ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்த்திய நிறுத்திய போலீஸ் விளக்கம்!
, வியாழன், 4 மே 2023 (17:13 IST)
தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமா தாண்டியும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆனால் தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி பூனேவில் அவரின் இசைக் கச்சேரி நடந்தது. இரவு 10 மணி வரை கச்சேரி நடத்த மட்டுமே அனுமதி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அதை தாண்டியும் கச்சேரி நடந்ததால் போலீஸார் தரப்பில் மேடையேறி கச்சேரியை நிறுத்தக் கூறியுள்ளனர். இதனால் ஏ ஆர் ரஹ்மான் பாதியிலேயே மேடையின் பின்பக்கம் வழியாக வெளியேறினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதையடுத்து சம்மந்தப்பட்ட போலீஸ் சந்தீப் பாட்டில் என்பவருக்கு சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் “நான் என்னுடைய வேலையைதான் செய்தேன். 10 மணிக்கு பொது இடத்தில் சத்தமாக இசை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. நான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அனுகினேன். அவர்களிடம் இருந்து சரியான பதில் வராததால் மேடைக்கு ஏறி நிகழ்ச்சியை நிறுத்தினேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லி – ஷாருக்கானின் ஜவான் பட ரிலீஸ் தேதி மாற்றமா?