Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸாரிடம் செமத்தையாக அடி வாங்கிய யோகி பாபு

Advertiesment
போலீஸாரிடம் செமத்தையாக அடி வாங்கிய யோகி பாபு
, திங்கள், 28 ஜனவரி 2019 (12:47 IST)
யோகி பாபு சந்தேகத்தின் பேரில் ஒரு சமயம் போலீஸாரிடம் அடிவாங்கியது பற்றி அவர் வெளியே கூறியுள்ளார்.

பல முன்னணி நடிகர்களில் படங்களின் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் யோகி பாபு. இவரது மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. ஹீரோக்களின் கால்ஷீட் கூட ஈசியாக கிடைத்து விடுகிறதாம். ஆனால் இவரின் கால்ஷீட் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனராம். அப்படி அவர் பயங்கர பிஸியாக இருக்கிறாராம்.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய யோகி பாபுவிடம், உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்ன என கேட்கப்பட்டது. சினிமா பயணங்களின் ஆரம்ப காலகட்டத்தின் போது, ஒரு சமயம் நாடகத்தில் நடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினேன். சந்தேகத்தின் பேரில் போலீஸார் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பைக் திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரித்தனர். அப்போது திடீரென ஒரு போலீஸ்காரர் எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என யோகி தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை வந்த ஹாலிவுட் துப்பறியும் காமிக்ஸ் படங்களில் 'அக்வாமேன்' வசூலில் டாப்!